பெரும்பான்மையை இழந்த பிரிட்டன் பிரதமர்

பெரும்பான்மையை இழந்த பிரிட்டன் பிரதமர்

பெரும்பான்மையை இழந்த பிரிட்டன் பிரதமர்
Published on

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார்.

போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி எம்பியான ஃபிலிப் லீ எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு மாறியுள்ளார். இதையடுத்து ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தனக்கிருந்த நூலிழை பெரும்பான்மையையும் இழந்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சி முன்பு போல் இல்லை என்றும், அரசியல் சூழ்ச்சிகளும் பொய்களும் நிறைந்ததாக மாறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிக்கு தாவிய ஃபிலிப் லீ கூறியுள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் விவகாரத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் நிலைப்பாடு பிரிட்டன் மக்களுக்கு ஆபத்தானது எனவும் லீ கூறியுள்ளார். 

இதற்கிடையே பிரிட்டன் நாடாளுமன்றம் வரும் மாதம் 14ம் தேதி வரை முடக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான கெடுவை நீடிக்க கோரும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். மேலும், திட்டமிட்டபடி அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் பிரிட்டனின் வெளியேற்றம் நிகழ்ந்தே தீரும் என்றும் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com