\
உருமாறிய கொரோனா எதிரொலி: பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் ரத்து?

உருமாறிய கொரோனா எதிரொலி: பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் ரத்து?

உருமாறிய கொரோனா எதிரொலி: பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் ரத்து?
Published on

பிரிட்டனில் வீரியமிக்க கொரோனா பரவி வருவதால் ஜனவரியில் போரிஸ் ஜான்சன் இந்தியா வர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா சிறப்பு விந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை உடையது என தகவல் வெளியாகி உள்ளது. நிலைமை கைமீறிப் போய்விட்டதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்நிலையில், உருமாறிய கொரோனா எதிரொலியாக இந்திய பயணத்திட்டத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com