பிரிட்டன் இளவரசர்- கேத் தம்பதிக்கு 3-வது குழந்தை: தாயும், சேயும் நலம்

பிரிட்டன் இளவரசர்- கேத் தம்பதிக்கு 3-வது குழந்தை: தாயும், சேயும் நலம்

பிரிட்டன் இளவரசர்- கேத் தம்பதிக்கு 3-வது குழந்தை: தாயும், சேயும் நலம்
Published on

பிரிட்டன் இளவரசர் பிரின்ஸ் வில்லியம்ஸ், கேம்பிரிட்ஜ் இளவரசி கேத் வில்லி‌யம்ஸ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேற்கு லண்டனின் கென்சிங்டன் அரண்மனையில் உள்ள செயின்ட் மே‌ரி மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் எடை 3.8 கிலோ ஆகும். தாயும், சேயும் நலமாக இருப்பதாக பிரிட்டன் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்‌ந்து இருவரும் ‌மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது, சாலையில் காத்திருந்த பொதுமக்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கென்சிங்டன் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்ட ‌அறிக்கையில், ‌கேத் வில்லியம்ஸுக்கு சிறப்பான முறையில் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்து‌மனையின் அனைத்து ஊழியர்களுக்கும் அரச குடும்பம் சார்பில் நன்றித் தெரிவித்துக் கொள்வதாக குறி‌‌ப்பிடப்பட்டுள்ளது. இளவரசர் வில்லியம்ஸ் - கேத்  தம்பதிக்கு 4 வயதில் ஜார்ஜ் என்ற மகனும், 2 வயதில் சார்லட் என்ற மகளும் ஏற்கனவே உள்ளனர்.  வில்லியம் - கேத் தம்பதிக்கு 3-வது குழந்தை பிறந்ததையடுத்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com