\
பேஷன் ஷோ மேடையில் விழுந்து பிரபல மாடல் திடீர் மரணம்!

பேஷன் ஷோ மேடையில் விழுந்து பிரபல மாடல் திடீர் மரணம்!

பேஷன் ஷோ மேடையில் விழுந்து பிரபல மாடல் திடீர் மரணம்!
Published on

பேஷன் ஷோவில் கலந்துகொண்ட பிரபல மாடல், நிகழ்ச்சி நடந்த மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல பிரேசில் மாடல், டேல்ஸ் சோரஸ் (Tales Soares). வயது 26. பிரேசிலில் உள்ள சாவோ பாலோ (Sao Paulo) என்ற நகரில் நேற்று நடந்த பேஷன் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டார். மேடையில் பூனை நடை நடந்துவந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார் சோரஸ். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென விழுந்தார். இதில் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டது. 

இதுவும் பேஷன் ஷோவில் ஒரு நிகழ்ச்சி என நினைத்து அங்கிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித் துதான் அவர் கீழே விழுந்துவிட்டார் என்பது தெரியவந்தது. பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை உடனடியாக அரு கில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். நிகழ்ச்சி மேடையிலேயே பிரபல மாடல் ஒரு வர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com