பிரேசில்: பூர்வீக இடங்களை உரிமைகொண்டாட பழங்குடியின மக்களுக்கு அதிகாரம்! உச்ச நீதிமன்றம் அதிரடி!

பிரேசிலில், பூர்வீக இடங்களை உரிமைகொண்டாட பழங்குடியின மக்களுக்கு அதிகாரம் வழங்கி, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புவழங்கி உள்ளது.
brazil
braziltwitter

பிரேசில் நாட்டில் 1988ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டபோது, பூர்வீக இடங்களில் இல்லாத பழங்குடியின மக்களுக்கு, அந்த இடத்தை உரிமைகொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. பின், 1960 முதல் 1980 வரை நடைபெற்ற ராணுவ ஆட்சியில், பூர்வீக இடங்களில் இருந்து பழங்குடியின மக்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த பிரேசில் நாட்டின் உச்ச நீதிமன்றம், பூர்வீக இடங்களை உரிமைகொண்டாட பழங்குடியின மக்களுக்கு அதிகாரம் வழங்கி தீர்ப்பு வழங்கி உள்ளது.

11 நீதிபதிகள் அடங்கிய அமர்வில், 9 நீதிபதிகள் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளனர். இதையடுத்து, பிரேசிலியாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில், பழங்குடியின மக்கள் திரண்டிருந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பாரம்பரிய உடை அணிந்தவாறு, நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com