\
உலகக் கோப்பைக்கு புதிய ஹேர்ஸ்டைலில் பிரேசில் கால்பந்து வீரர்கள்

உலகக் கோப்பைக்கு புதிய ஹேர்ஸ்டைலில் பிரேசில் கால்பந்து வீரர்கள்

உலகக் கோப்பைக்கு புதிய ஹேர்ஸ்டைலில் பிரேசில் கால்பந்து வீரர்கள்
Published on

பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர்கள் உலக கோப்பை போட்டிக்காக புதிய ஹேர்ஸ்டைலில் வலம் வரவுள்ளனர்.

ரஷ்யாவில் வரும் 12ஆம்தேதி உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்க இருக்கிறது. இதற்காக லண்டன் நகரில் பிரேசில் அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க இருக்கும் பிரேசில் அணி வீரர்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற புதிய வடிவத்தில் முடி திருத்தம் செய்துள்ளனர். 

மான்செஸ்டர் அணிக்காக 468 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகியுள்ள ஃபிரட் தனது புதிய சிகையலங்கார புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சக வீரர்களான கேப்ரியல் ஜீசூஸ், வில்லியன் ஆகியோரும் வித்தியாசமாக முடி திருத்தம் செய்துள்ளனர். எதிர்வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்த புதிய ஹேர்ஸ்டைல் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com