\
பிரேசில்: நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு 136ஆக உயர்வு - மீட்பு பணிகள் தீவிரம்

பிரேசில்: நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு 136ஆக உயர்வு - மீட்பு பணிகள் தீவிரம்

பிரேசில்: நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பு 136ஆக உயர்வு - மீட்பு பணிகள் தீவிரம்
Published on

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 136ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், காணாமல்போன 200 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகியுள்ளன. எதிர்பாராமல் நேர்ந்த இவ்விபத்தால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com