அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்த பிரேசில் பெண்கள் கால்பந்து அணி பயணித்த விமானம்! ஏன் தெரியுமா?

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் பங்கேற்க பிரேசில் அணியினர் ஆஸ்திரேலியாவுக்கு வந்திறங்கிய விமானம், அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

9வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற இருக்கிறது. இதில் 32 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த நிலையில், பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் பங்கேற்க பிரேசில் அணியினர் ஆஸ்திரேலியாவுக்கு வந்திறங்கிய விமானம், அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

பிரேசில் வீராங்கனைகள்
பிரேசில் வீராங்கனைகள்புதிய தலைமுறை

அதில், ஈரானில் புர்கா அணியாததன் விளைவாக உயிரிழந்த பெண்ணின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. ஈரானில், தலையை மறைக்க துணி (புர்கா) பயன்படுத்தாத காரணத்தால் மாஷா அமினி என்ற பெண் கைது செய்யப்பட்டு, காவல் துறையினரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். பின், அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அமீர் நாசர் அசாதானி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக, இருவரின் புகைப்படங்களுடன், எந்தவொரு பெண்ணையும் தலையை மறைக்க கட்டாயப்படுத்தக் கூடாது என்ற வாசகமும் அந்த விமானத்தில் அச்சிடப்பட்டிருந்தது.

இதனால் பிரேசில் கால்பந்து மகளிர் அணியினர் வந்த விமானம் சர்வதேச கவனம் பெறக் காரணமாக அமைந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com