'டெலிகிராம்' செயலிக்கு தடை - எந்த நாட்டில்? ஏன் தெரியுமா?

'டெலிகிராம்' செயலிக்கு தடை - எந்த நாட்டில்? ஏன் தெரியுமா?

'டெலிகிராம்' செயலிக்கு தடை - எந்த நாட்டில்? ஏன் தெரியுமா?
Published on

அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் , பிரேசில் உச்சநீதிமன்றம் , டெலிகிராம் செயலி பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது.

வரும் அக்டோபரில் பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி டெலிகிராம் செயலியில் குறிப்பிட்ட அரசியல் கட்சியினருக்கு ஆதரவாகவும் ஒரு தலைபட்சமாகவும் கருத்துகள் பகிரப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. எனவே, பொய் செய்திகள் பரப்பப்படுவதை தடுக்க வேண்டுமென டெலிகிராம் செயலி நிறுவனத்துக்கு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.

எனினும் டெலிகிராம் செயலி எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உச்சநீதிமன்றம் அந்த செயலிக்கே தடை விதித்துள்ளது. அதிபர் போல்சனாரோ, டெலிகிராம் செயலி மூலம் , தொண்டர்களோடு தொடர்பில் இருந்து வந்த சூழலில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டில் வாட்ஸ்ஆப், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் நாட்டின் சட்டங்களை பின்பற்றுவதாகவும் அதேநேரத்தில் டெலிகிராம் அவற்றை பின்பற்றத் தவறுவதாகவும் வலதுசாரி தலைவர்கள் அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெலிகிராம் நிறுவனத்தின் தலைவர் பாவெல் துரோவ் கூறுகையில், ''எங்கள் அலட்சியத்திற்காக நான் பிரேசில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com