தனது மனைவிக்கு தானே பிரசவம் பார்த்த பிரேசில் கால்பந்து வீரர்

தனது மனைவிக்கு தானே பிரசவம் பார்த்த பிரேசில் கால்பந்து வீரர்

தனது மனைவிக்கு தானே பிரசவம் பார்த்த பிரேசில் கால்பந்து வீரர்
Published on

பிரேசில் கால்பந்து வீரர் ப்ரையன் போர்கஸின் (24 வயது) மனைவி மில்லேனாவுக்கு (26 வயது) கடந்த 1ஆம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. எனவே ப்ரையன் வீட்டிலிருந்து வெளியே அவரைத் தூக்கி வந்திருக்கிறார்.

லிப்ட்டிற்கு அருகே கொண்டுவந்தபோது லில்லேனாவுக்கு குழந்தை வெளியே வர தொடங்கியதும், அவர் அருகிலிருந்த பெஞ்சில் தன்னை அமரவைக்கும்படி கேட்டுள்ளார். மருத்துவமனைக்குச் செல்ல காரை ஆயத்தப்படுத்திய நிலையில், வீட்டிற்கு வெளியே நடைபாதையிலேயே தனது மகளைப் பெற்றெடுத்தனர் இந்த தம்பதியினர்.

பின்னர் அவரை அங்கிருந்து கொண்டுசெல்ல முடியாத சூழ்நிலையில், ப்ரையனின் இரண்டு நண்பர்களை உதவிக்கு அழைத்தார். போர்வைகளுடன் அங்குவந்த நண்பர்கள், தம்பதியினரை மறைத்துப் பிடித்தனர். ப்ரையனே தனது மனைவிக்கு நடைபாதையில் வைத்து பிரசவம் பார்த்திருக்கிறார். பிறகு மனைவியை அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 

தற்போது குழந்தை சிசிலியாவும், தாயும் நலமுடன் உள்ளனர். இதுபற்றிப் பேசிய ப்ரையன், இந்த அனுபவம் வித்தியாசமான இருந்ததாகவும், எதிர்காலத்தில் தனது மகளிடம் அவள் பிறப்பு பற்றி கூறப்போவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

வீட்டிலிருந்து வெளியே வந்ததிலிருந்து குழந்தை பிறந்ததுவரை அனைத்துக் காட்சிகளும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com