பிரேசில்: தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்! 62 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் விமானம் ஒன்று கீழே திடீரென விழுந்து விபத்துக்குள்ளானதில் 62 பேர் உயிரிழந்தனர்.
சாவ் பாலே விமான நிலையத்திற்கு 58 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்களுடன் வியோபாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று வின்ஹெடோ நகர் மீது சென்றபோது திடீரென தடுமாறி கீழே விழுந்தது.
வீடுகள், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே விமானம் விழுந்ததில் அதில் பயணித்த 62 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழே விழுந்த விமானம் வெடித்து சிதறியதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. விபத்து குறித்து அறிந்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
விமான விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு குழு, தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே விமானம் செங்குத்தாக தரையில் விழும் காட்சிகள் வெளியாகிவுள்ளன.