\
பிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் உயிரிழப்பு

பிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் உயிரிழப்பு

பிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் உயிரிழப்பு
Published on

பிரேசில், மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பிரேசிலின் வடமாநிலமான பாராவில் உள்ளது பெலம் நகரம். இங்குள்ள பார் ஒன்றில் நேற்று மாலை அதிகமானோர் மது குடித்துக்கொண்டி ருந்தனர். அப்போது மூன்று கார் மற்றும் ஒரு பைக்கில் வந்த ஏழு பேர் மதுபான விடுதிக்குள் புகுந்தனர். 

தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சரமாரியாக அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுவிட்டுத் தப்பியோடி விட்டனர். இதில் 6 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட அனைவருக்கும் நெற்றியில் குண்டு பாய்ந்துள்ளது.

எதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது? பயங்கரவாதத் தாக்குதலா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com