காதலி மீது சந்தேகம் - ஆப்பிள் வாட்ச் மூலம் கண்காணித்த காதலன் கைது!

காதலி மீது சந்தேகம் - ஆப்பிள் வாட்ச் மூலம் கண்காணித்த காதலன் கைது!
காதலி மீது சந்தேகம் - ஆப்பிள் வாட்ச் மூலம் கண்காணித்த காதலன் கைது!

அமெரிக்காவில் காதலியின் காரில் ஆப்பிள் வாட்சை இணைத்து அவரைக் கண்காணித்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஆப்பிள் சமீபத்தில் தனது ஏர்டேக்குகளை அதிக பாதுகாப்பு மற்றும் ஆண்டி-ஸ்டால்கிங் அம்சங்களுடன் மேம்படுத்த வேண்டியிருந்தது, மக்கள் ஏர்டேக்குகளை பயன்படுத்தி கிரிமினல் குற்றங்களைச் செய்ததால் ஏர்டேக்கில் பல மாற்றங்களை ஆப்பிள் கொண்டு வந்தது. ஆனால் ஆப்பிள் வாட்சைப் பின்தொடர்ந்து செல்லும் சாதனமாக மாற்ற முடியும் என்பது பற்றி ஆப்பிள் அறிந்திருக்கவில்லை. அப்படி ஒரு புது குற்றம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில்லியைச் சேர்ந்தவர் 29 வயதான லாரன்ஸ் வெல்ச். இவர் தனது காதலியுடம் தொடர்ந்து சண்டையிடும் வழக்கம் உடையவர். தன் காதலி எங்கு செல்கிறார் என்று தன்னிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். முதலில் காதலி இதற்கு சம்மதித்து Life360 என்ற செயலியின் மூலம் இருவரும் இருப்பிடத்தை பகிர்ந்துள்ளனர். ஆனால் ப்ரேக் அப் செய்ய முடிவு செய்தபின் இருப்பிடத்தை காதலி பகிர மறுத்துள்ளார். ஆனால் லாரன்சு தொடர்ந்து இருப்பிடத்தை அனுப்புமாறும், திரும்ப அழைக்குமாறும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

லாரன்சு பலமுறை கொலை மிரட்டல் விடுத்ததால் காதலி பாதுகாப்பு மையத்திற்கு வந்துள்ளார். காவலர்கள் லாரன்சை தொடர்பு கொண்டு அவரையும் அங்கு வருமாறு கூறினார். காவலர்கள் காத்திருக்க அங்கு வந்த லாரன்ஸ் காதலியின் கார் டயர் அருகே ஏதோ செய்து கொண்டிருப்பதை காவலர்கள் பார்த்துவிட்டனர். சந்தேகமடைந்து கார் டயரை சோதித்தா போது டயரில் இருந்து ஆப்பிள் வாட்ச் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த வாட்சை வைத்தது லாரன்ஸ் என்பதை காவலர்கள் கண்டறிந்தனர்.

அதன்பின் விசாரணையில் லாரன்ஸ் காதலியை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்தது தெரிய வந்தது. ஆப்பிள் வாட்ச் ஒன்றை வாங்கி காதலியின் காரின் டயரில் அந்த வாட்சைக் கட்டினார். மூன்றாம் தரப்பு கண்காணிப்பு செயலி மூலம் காதலியின் இருப்பிடத்தை கண்காணித்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட லாரன்ஸை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒருவரைக் கண்காணிக்க ஆப்பிள் வாட்ச் பயன்படுத்தப்பட்ட அரிதான சம்பவங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம், ஏனெனில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டின் முற்பகுதியில் நடந்த பெரும்பாலான சம்பவங்கள் ஏர்டேக்குகளுடன் தொடர்புடையவை. ஆனால் இப்போது அது ஆப்பிள் வாட்சில் கண்காணிப்பைக் கட்டுப்படுத்த ஒரு வழியை “ஆப்பிள்” நிறுவனம் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com