\
விளையாட சென்றுவிட்டு மான் குட்டியுடன் திரும்பி வந்த சிறுவன்..!  

விளையாட சென்றுவிட்டு மான் குட்டியுடன் திரும்பி வந்த சிறுவன்..!  

விளையாட சென்றுவிட்டு மான் குட்டியுடன் திரும்பி வந்த சிறுவன்..!  
Published on

விளையாடச் சென்ற சிறுவன் ஒருவன், திரும்பி வருகையில் தன்னுடன் ஒரு குட்டி மானை அழைத்து வந்ததைக் கண்டு பெற்றோர் ஆச்சரியமடைந்தனர்.

அமெரிக்காவின் ஸ்டீபனி பிரவுன் என்பவர் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை செலவிட வர்ஜீனியா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அவர்கள் ஷெனாண்டோ தேசிய பூங்கா அருகே ஒரு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். அப்போது ஸ்டீபனி பிரவுனின் 4 வயது மகனான டொமினிக் தனது நாய்க்குட்டியுடன் சிறிது தூரம் சென்று விளையாடச் சென்றார். அப்போது டொமினிக் விளையாடிவிட்டு திரும்புகையில் குட்டி மான் ஒன்றையும் அழைத்து வந்து அனைவரையும் திடுக்கிடச் செய்தான். 

இதனை கண்டு ஆச்சரியமடைந்த சிறுவனின் தாய், உடனடியாக மானுடன், தன் மகன் நின்றதை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com