\
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து!
Published on

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பை தொடர்ந்து போரிஸ் ஜான்சனின் திட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இம்மாத இறுதியில் இந்தியா வருவதாக இருந்தது. பிரெக்ஸிட் கூட்டமைப்பு நாடுகளின் பயணத்திற்கு பிறகு, போரிஸ் மேற்கொள்ள இருக்கும் முக்கியமான பயணமாக இந்தப் பயணம் பார்க்கப்பட்டது. முன்னதாக குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் இந்தியா வர இருந்தார். ஆனால், இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இப்போது இரண்டாவது முறையாக போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com