\
பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு
Published on

பிரிட்டன் பிரதமராக கன்சேர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசா மே அந்தப் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்ற பரப்பரப்பு அதிகரித்தது. பிரதமருக்கான போட்டியில் கன்சேர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெரமி ஹண்ட் ஆகியோர் இருந்தனர். 

இந்நிலையில்  இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 92,153 வாக்குகள் பெற்று பிரிட்டன் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போதைய பிரதமர் தெரசா மே தனது பதவியை நாளை ராஜினாமா செய்கிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com