அரிய வகை தவளை இனத்தைக் காக்க டேட்டிங் வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
பொலிவியாவில் உள்ள பிரபல அருங்காட்சியங்களில் ஒன்றான தேசிய வரலாற்று அருங்காட்சியகம், அரிய வகை தவளையை பாதுகாப்பதற்காக டேட்டிங் வெப்சைட் துவங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தவளை இவ்வினத்தின் கடைசி உயிரினமாகும். இதை பாதுகாப்பதற்காக அருங்காட்சியம் புதுவிதமாக சிந்திந்து இப்படி ஒரு வெப்சைட்டை துவங்கிவுள்ளது. இன்னும் 5 வருடத்தில் இந்தத் தவளை இறந்துவிடும் என்பதால் அதன் இனத்தை பாதுகாக்க தற்போது அதற்கு ஜோடி ஒன்றை தேட தொடங்கியுள்ளனர்.
இந்த அரிய வகை தவளையின் பெயர் ரோமியோ. ரோமியோ தன் தனிமையின் ஏக்கம் குறித்தும், தன்னுடைய முக்கியத்துவம் குறித்தும் பேசும் வீடியோ ஒன்றை அந்த அருங்காட்சியம் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். ரோமியோவிற்கு ஒரு ஜூலியட் தேடும் பணியில் அந்த அருங்காட்சியம் தீவிரமாக உள்ளது. இதற்காக நிதியும் திரட்டப்பட்ட உள்ளது. உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிறைய நபர்கள் பணம் கொடுத்து வருகின்றனர். இந்த நிதி பல்வேறு காடுகளுக்கு சென்று ரோமியோவுக்கு ஜோடியை தேட உதவும் என்று தெரிவித்துள்ளனர்.