\
சுரங்கப்பாதையில் சடலம்: காணாமல் போன இந்திய சிறுமியா?

சுரங்கப்பாதையில் சடலம்: காணாமல் போன இந்திய சிறுமியா?

சுரங்கப்பாதையில் சடலம்: காணாமல் போன இந்திய சிறுமியா?
Published on: 

அமெரிக்கச் சுரங்கப்பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் மாயமான இந்திய சிறுமியின் சடலமாக இருக்கலாம் என டெக்சாஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் வெஸ்லி மாத்யூஸ். இவர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ரிச்சட்சன் நகரில் மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்தியாவில் உள்ள அனாதை இல்லம் ஒன்றில் இருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார். அவர் பெயர் ஷெரின். 
ஷெரின் இரவில் பால் குடிக்காததால் கோபமான வெஸ்லியும் அவர் மனைவியும் வீட்டுக்கு வெளியே நிறுத்தினர். சிறிது நேரத்தில் சிறுமியை தேடிய போது மாயமானாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து ரிச்சர்ட்சன் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இதற்கிடையே சிறுமிக்கு தண்டனை கொடுத்ததாக, வெஸ்லி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

சம்பவம் நடந்து 2 வாரங்கள் ஆன நிலையில், மேத்யூஸ் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் சுரங்க பாதையில் சிறுமியின் சடலம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அது, காணாமல் போன ஷெரினாக இருக்கலாம் என போலீஸ் கூறுகிறது. இருந்தும் அது உறுதி செய்யப்படவில்லை. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com