படகு கவிழ்ந்து 10 பேர் பலி

படகு கவிழ்ந்து 10 பேர் பலி

படகு கவிழ்ந்து 10 பேர் பலி
Published on

பிரேசில் நாட்டில் 70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். 

பிரேசில் நாட்டில் உள்ள ஷிங்கு என்ற ஆற்றில் 70 பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகு ஆற்றின் நடுவே சென்றபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதில் 25 பேர் கரை திரும்பியுள்ளனர். 10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மற்றவர்கள் காணாமல் போனதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com