உலகம்
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: குழந்தைகள் உள்பட 6பேர் பலி
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: குழந்தைகள் உள்பட 6பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிந்தனர்.
ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் உள்ள ஷிண்டாண்ட் மாவட்டத்தின் மசூதி அருகே பயங்கரவாதிகள் திடீரென கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.