இப்படி ஒரு பழக்கமா? ஜப்பானியரின் செயலால் அதிசயத்துப்போன நெட்டிசன்ஸ்!

இப்படி ஒரு பழக்கமா? ஜப்பானியரின் செயலால் அதிசயத்துப்போன நெட்டிசன்ஸ்!
இப்படி ஒரு பழக்கமா? ஜப்பானியரின் செயலால் அதிசயத்துப்போன நெட்டிசன்ஸ்!

நம் நாட்டில் பெரும்பாலானோர் பஸ், ட்ரெயின் டிக்கெட்களை சேமிப்பதை பொழுதுபோக்காக கொண்டிருப்பார்கள். அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த நெர்னோ டைசுகி என்ற நபர் விசித்திரமாக கற்களை சேமித்து வருகிறார்.

சாதாரணமாக சாலையில் கிடக்கும் கற்களை சேமிப்பதை தவிர்த்து நெர்னோ செய்தது சற்று வழக்கத்துக்கு மாறானதாக இருந்தது.

அதன்படி, தன்னுடைய ஷூவின் இடுக்குகளில் சிக்கும் கற்களை சேமிப்பதை நெர்னோ பொழுதுபோக்காகவே கொண்டிருக்கிறார்.

பொதுவாக நம்முடைய ஷூ அல்லது காலணிகளில் இப்படியான கற்கள் சிக்கினால் கண்டும் காணாமல் இருப்போம் அல்லது அதனை தூசித்தட்டி நீக்கிடுவோம்.

ஆனால் நெர்னோ டைசுகி கடந்த ஓராண்டாக தனது ஷூக்களில் சிக்கிய கற்களை சேமித்து வருவதாக அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், கடந்த 2021 ஜூன் 22 முதல் தன்னுடைய ஷூக்களில் சிக்கும் கூழாங்கற்கள், கண்ணாடி துண்டுகள் என அனைத்தையும் 3 நாட்களுக்கு ஒரு முறை சேமித்து வந்திருக்கிறார்.

அதன்படி 179 கூழாங்கற்களும், 32 கண்ணாடி துண்டுகளும், ஒரு நட் என மொத்தம் 212 துண்டுகளை சேமித்திருக்கிறேன். தினந்தோறும் சேமிக்கத் தொடங்கினால் அதன் எண்ணிக்கை பெரிய அளவிலும், இரண்டு கால்களின் ஷூக்களில் சிக்கும் கற்களை சேமித்திருந்தால் இன்னும் வேடிக்கையாக இருந்திருக்கும்.

புதிதாக வாங்கிய என்னுடைய ஸ்னீக்கரில் முதல் முதல் கற்கள் சிக்கும் போது அதனை தூக்கி எறிவதற்கு பதில் சேமித்து வைக்கலாமே என தோன்றியது என நெர்னோ டைசுகி கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com