\
விமானத்தில் பறவை மோதி விபத்து

விமானத்தில் பறவை மோதி விபத்து

விமானத்தில் பறவை மோதி விபத்து
Published on: 

அகமதாபாத்திலிருந்து அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானத்தில், நடுவானில் பறவை மோதியதால், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.

அகமதாபாத்திலிருந்து அமெரிக்காவின் நெவார்க் நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று புறப்பட்டுச் சென்றது. லண்டன் வழியாகச் செல்லும் இந்த விமானத்தில் 230 பயணிகள் இருந்தனர். நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தின் மூக்குப் பகுதியில் பறவை ஒன்று மோதியது. இதில் ரேடார் சேதமடைந்தது. இதையடுத்து விமானம், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். பெரும்விபத்து ஏற்படாததால், பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com