" வேகமாய் பரவும் ஒமைக்ரான் நோய் தொற்று காலத்தின் மோசமான பகுதி" - பில் கேட்ஸ்

" வேகமாய் பரவும் ஒமைக்ரான் நோய் தொற்று காலத்தின் மோசமான பகுதி" - பில் கேட்ஸ்
" வேகமாய் பரவும் ஒமைக்ரான் நோய் தொற்று காலத்தின் மோசமான பகுதி" - பில் கேட்ஸ்

மற்ற வைரஸுகளை விட ஒமைக்ரான் வேகமாக பரவுவது தொற்றுநோய் காலத்தின் மோசமான பகுதி என்று கூறலாம் என பில் கேட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

பிரபல அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸ் ஒமைக்ரான் தொற்று பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், ‘’நாம் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்த வேளையில், தொற்றுநோய் காலத்தின் மோசமாக பகுதிக்குள் நுழையக்கூடும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. ஒமைக்ரான் நம் அனைவரின் வீட்டிற்கும் வரும். என்னுடைய நெருங்கிய நண்பர்களில் சிலருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் எனது ஹாலிடே திட்டங்களை ரத்து செய்துவிட்டேன். வரலாற்றிலேயே மற்ற வைரஸ்களைவிட ஒமைக்ரான் மிகவேகமாக பரவிவருகிறது. விரைவில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவும்.

ஆனால் ஒமைக்ரான் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இதுபற்றி தெளிவாக தெரியும்வரை இதனை கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம். டெல்டாவில் பாதியளவு மட்டுமே வீரியம் கொண்டிருந்தாலும்கூட அதைவிட வேகமாக பரவுகிறது ஒமைக்ரான். எனவே பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிதலை ஊக்குவித்து, கூட்டங்கூடுதலை தவிர்த்து, தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் பாதுகாப்புக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் எடுத்துக்கொள்ளலாம்.

தடுப்பூசி செலுத்தியது பாதுகாப்பானதாக இருந்தாலும் எத்தனை பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் மற்றும் ஒமைக்ரான் எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் மக்களை தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்பிலிருந்து பாதுகாக்கவே வடிவமைக்கப்பட்டவை. இந்த தொற்றின் பாதிப்பு குறைந்தது 3 மாதங்களுக்காவது இருக்கும். ஆனால் 2022இல் தொற்றுநோய்க்காலம் முடிவடையலாம். இந்த தொற்றுநோய் காலம் மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தினாலும், நாம் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வது நல்லது. ஒருநாள் இது கட்டாயம் முடிவுக்கு வரும். அந்த நாள் சீக்கிரம் வரும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com