பாகிஸ்தானில் பில்கேட்ஸ் - உயரிய விருது வழங்கி கௌரவித்த அதிபர்

பாகிஸ்தானில் பில்கேட்ஸ் - உயரிய விருது வழங்கி கௌரவித்த அதிபர்
பாகிஸ்தானில் பில்கேட்ஸ் - உயரிய விருது வழங்கி கௌரவித்த அதிபர்

பாகிஸ்தான் நாட்டிற்கு முதன்முறையாக வருகை தந்த மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸுக்கு, அந்நாட்டின் இரண்டாவது உயரிய விருதான குடிமகன் விருது வழங்கப்பட்டது

போலியோ ஒழிப்பிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, பாகிஸ்தானின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' என்ற இந்த விருதை பில் கேட்ஸ்க்கு அந்த நாட்டின் அதிபர் ஆரிஃப் அல்வி வழங்கினார்.

பாகிஸ்தானுக்கு முதன்முறையாக சென்ற பில் கேட்ஸுக்கு பிரதமர் இம்ரான் கான் மதிய விருந்து அளித்தார். அதன்பின்னர் பேசிய பில் கேட்ஸ், பாகிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் ஆகியவை போலியோ பரவும் உலகின் இரண்டு முக்கியமான நாடுகள். இந்த நாடுகளில் எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக போலியோ ஒழிப்பு வரும் ஆண்டுகளில் சாத்தியமாகும் என்று நம்புவதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com