
புனித வெள்ளி ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி 1998 ஆம் ஆண்டு அயர்லாந்து மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே தீர்வு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு அயர்லாந்தில் உள்ள கத்தோலிக்கர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிலவி வந்த மோதல் போக்கு நிறுத்தப்பட்டது.
அதன்படி, புனித வெள்ளி சமாதான உடன்படிக்கையின் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வடக்கு அயர்லாந்து சென்றிருக்கிறார். இந்த பயணத்தின்போது, புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்தின் 25ம் ஆண்டு விழாவில் பைடன் பங்கேற்கிறார்.
இதற்கிடையே, லண்டன்டேரி நகரத்தில், முகமூடி அணிந்த மர்ம கும்பலொன்று பைடன் வருகைக்கு முன், போலீஸ் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கும்பல் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. பைடனின் வருகைக்கு முந்தைய மாலை வேளையில் இது நடந்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போது அதிகாரிகள் மற்றொரு பரேடில் இருந்ததாகவும், அதனால் யாருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லையென்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.