புடினுக்கு உக்ரைன் போரில் இருந்து வெளியேற வழி இல்லை: ஜோ பைடன்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு உக்ரைன் போரில் இருந்து வெளியேற வழி இல்லை என்று கவலைப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் புறநகர் பகுதியில் அரசியல் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் பைடன், "புடின் மிகவும் கணக்கிடக்கூடிய மனிதர். ஆனால் ரஷ்யத் தலைவருக்கு இப்போது ஒரு உக்ரைன் போரிலிருந்து வெளியேற வழி இல்லை. எனவே இதற்காக நாம் என்ன செய்வோம் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்" என தெரிவித்தார்.
மேலும், " உக்ரைன் மீதான படையெடுப்பு நேட்டோவை உடைத்து ஐரோப்பிய ஒன்றியத்தையும் உடைக்கும் என்று புடின் தவறாக நம்பினார். மாறாக, அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனின் பக்கம் திரண்டுள்ளன" என்று கூறினார்.
நேட்டோவில் இணையும் உக்ரைன் நாட்டின் நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த நாட்டின் மீது பிப்ரவரி 24ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. ஆனால், உக்ரைன் தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் தாக்குதல் வலுவான எதிர்ப்பால் மார்ச் மாதம் முறியடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைன் மீது தொடந்து தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்யா.