48 மணி நேரத்தில் ரூ.359 கோடி.. கமலா ஹாரிஸால் ஜோ பிடேனுக்கு திரண்ட நிதி !

48 மணி நேரத்தில் ரூ.359 கோடி.. கமலா ஹாரிஸால் ஜோ பிடேனுக்கு திரண்ட நிதி !
48 மணி நேரத்தில் ரூ.359 கோடி.. கமலா ஹாரிஸால் ஜோ பிடேனுக்கு திரண்ட நிதி !

அமெரிக்க துணை அதிபருக்கான போட்டியில் கமலா ஹாரிசை முன்னிருத்தியதன் மூலம் 48 மணி நேரத்தில் ரூ.359 கோடி நிதி திரட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் ஜோ பிடேன்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் வெற்றிபெறும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர், முதல் கருப்பின பெண் துணை அதிபர், முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் இந்திய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை அதிபர் என பல புதிய சாதனைகளை பதிவு செய்வார்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவித்ததிலிருந்து 48 மணி நேரத்தில் ரூ.359 கோடி தேர்தல் நிதியாக கிடைத்துள்ளது. இது அதிபர் வேட்பாளரான ஜோ பிடனேனின் சாதனை என அமெரிக்க ஊடகங்கள் புகழாரம் சூட்டி வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

அதில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் -ஐ எதிர்த்து ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் (55) என்பவர் போட்டியிடுகிறார். அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com