ரூ 1 கோடியை மறந்து விட்டு சென்ற தம்பதி

ரூ 1 கோடியை மறந்து விட்டு சென்ற தம்பதி

ரூ 1 கோடியை மறந்து விட்டு சென்ற தம்பதி
Published on

அமெரிக்காவில் விமானம் ஒன்றில் பயணித்த தம்பதி ரூ.1 கோடியை மறந்து விட்டு சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து ஜெர்மனியில் உள்ள ம்யூநிச் நகரத்துக்கு பவேரியாவை சார்ந்த தம்பதி பயணித்தனர். அவர்கள் தங்கள் பணப் பையை தங்களின் இருக்கைக்கு மேல் உள்ள இடத்தில் வைத்துள்ளனர். ஆனால் விமானத்தை விட்டு இறங்கும் போது அதை மறந்து விட்டு சென்றனர்.

விமானத்தை சுத்தம் செய்யும் போது அந்த பையை கண்ட விமான நிர்வாகம், போலிஸ் மூலம் பவேரியா தம்பதியை கண்டுப்பிடித்து பணப் பையை திருப்பி அளித்தது.

அந்த பணம் அவர்களது பரம்பரைச்சொத்து என்றும் விமான நிறுவனத்திற்கு நன்றி என்றும் அந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com