நெகிழி உட்கொண்டதால் உயிரிழந்த கடற்பசுக் குட்டி

நெகிழி உட்கொண்டதால் உயிரிழந்த கடற்பசுக் குட்டி
நெகிழி உட்கொண்டதால் உயிரிழந்த கடற்பசுக் குட்டி

தாய்லாந்தில் கடற்பசுக் குட்டி ஒன்று உயிரிழந்தது அந்நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மரியம் என்ற கடல் பசு ஒன்று நெகிழிப்பொருட்கள் உட்கொண்டதால் வயிற்று வலியால் அவதிப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கடல் வாழ் உயிரின ஆய்வாளர்கள் இதை கவனித்த நிலையில் அந்தக் கடற்பசுவை அந்நாட்டு வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனர். அவ்வப்போது கடற்பசுவின் உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து கடல் வளத்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோக்களுடன் பதிவிடப்பட்டன. 

இதனால் தாய்லாந்து மக்களின் கவனத்தை மரியம் கடற்பசு ஈர்த்துவந்தது‌. இந்த நிலையில் 8 மாதமே ஆன மரியம் திடீரென இன்று அதிகாலை உயிரிழந்தது. குடலில் நெகிழிப் பொருட்கள் கணிசமாக இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் தாய்லாந்து மக்கள் மரியம் கடற்பசு குறித்து தங்களின் துயரை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com