பெலாரஷ் நாடு ரஷ்யாவுடன் இணைக்கப்படாது என அந்நாட்டு அதிபர் லுகாஷேங்கோ தெரிவித்துள்ளார்.
சோவியத் ஒன்றியம் கடந்த 1991 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. இதிலிருந்த 15 புதிய நாடுகள் சுதந்திரம் பெற்றன. சோவித் ஒன்றிய காலத்தில் பெலோரஷ்யா (Belorussia) என்று அழைக்கப்பட்ட பெலாரஷ், ரஷ்யாவுடன் இணைந்து இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்குப் பிறகு கடந்த 1991 ஆம் பெலாரஷ் சுதந்திரம் பெற்று தனி நாடானது. இருப்பினும் அந்த நாட்டில் அதிக ரஷ்யர்கள் வசித்து வந்தனர். அவர்கள் பெலோரஷ்யன்ஸ் (Belarusians) என அழைக்கப்பட்டனர்.
சுதந்திரத்திற்குப் பிறகும் பெலாரஷ் நாடு ரஷ்யாவுடன் நெருங்கிய பொருளாதார தொடர்புகளை வைத்திருந்தது. பெலாரஷ் நாட்டிற்கு 1994ஆம் ஆண்டு முதல் லுகாஷேங்கோ அதிபராக இருந்து வருகிறார். அவர் ரஷ்யா நாட்டுடன் மிகவும் நட்புறவுடன் ஆட்சி புரிந்து வருகிறார். பெலாரஷ் நாடு ரஷ்யாவிடமிருந்து எரிப்பொருள் மட்டும் கடன்களை பெற்றுவந்தது.
இந்நிலையில் பெலாரஷ், ரஷ்யாவுடன் மறுபடியும் இணைக்கப்படாது என அதிபர் லுகாஷேங்கோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,“பெலோரஷ்யன்ஸ் ரஷ்யாவுடன் இருக்கவேண்டும் நினைத்தாலும் அவர்கள் தனி நாட்டில் வசிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். வேண்டுமென்றால் ரஷ்யாவும் பெலாரஷூம் ஒரே பணத்தை வைத்துகொள்ளலாம்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் நாட்டின் பகுதியான கிரிமியாவை தன் நாட்டுடன் இணைத்துகொண்டது. அதிலிருந்து பெலாரஷ்யாவையும் ரஷ்யா இணைத்துகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ரஷ்யாவும் பெலாரஷுக்கு வழங்கிவந்த எரிப்பொருளின் விலையை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.