மெக்ஸிகோ மீதான நடவடிக்கையை கேலி செய்யும் வகையில் உக்ரைனில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் பீர் தயாரித்துள்ளனர்.
உக்ரைனின், லிவிவ் நகரத்தில், ப்ராவ்தா என்ற விடுதி ஒன்றில் ’பிரிவினைவாத அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்’ என்ற பெயரில் பீர் விற்கப்படுகிறது. டேஸ்ட்டாக இருக்கிறது என்று ‘டிரம்ப்’ பீரை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகுகின்றனர். அங்கு ரஷ்ய அதிபர் புதின் பெயரிலும் பீர் விற்கப்படுகிறது. இந்த விடுதி ஏற்கனவே ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மார்க்கெல், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா பெயரிலும் பீர் தயாரித்து விற்பனை செய்துள்ளது.