\
பாதுகாப்பாக இருங்கள் - சீனர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்

பாதுகாப்பாக இருங்கள் - சீனர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்

பாதுகாப்பாக இருங்கள் - சீனர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்
Published on: 

இந்தியாவில் இருக்கும் சீனர்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவுக்குச் செல்பவர்கள் பத்திரமாக இருக்கும்படி தங்கள் நாட்டினருக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நிலவரம் குறித்து அறிந்து கொண்டு பயணம் மேற்கொள்ளும்படியும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது. டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் மூலமாக இதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எனினும் இது பயண எச்சரிக்கை அல்ல என இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். சிக்கிம் மாநிலத்துக்கு அருகேயுள்ள டோக்லம் பீடபூமியில் சீனா சாலை அமைப்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com