செய்தியாளர்களை தாக்கும் இஸ்ரேல்... வெகுண்டெழுந்த பிபிசி....!

இஸ்ரேல் ஹமாஸ் குழுவினர் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், செய்தி சேகரிக்க காரில் சென்ற பிபிசி அரேபிய செய்தியாளர் குழுவை இடைமறித்த இஸ்ரேலிய போலீசார், காரில் இருந்தவர்களை தாக்கியதோடு துப்பாக்கி முனையில் விசாரித்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்னையில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 7ம் தேதி முதல் போர் தொடர்ந்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். குறிப்பாக போர் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் 10 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் எனும் பகுதியில் செய்தி சேகரிக்க பிபிசியின் அரேபிய செய்தியாளர்கள் குழு காரில் சென்றுள்ளது. அப்போது அவர்களின் காரை இடைமறித்த இஸ்ரேலிய போலீஸார், காரில் இருந்தவர்களை வெளியே இழுத்துச் சென்று அங்கிருந்த சுவற்றில் மோதி துப்பாக்கி முனையில் விசாரித்துள்ளனர். முகமது டுடுஞ்சி மற்றும் ஹைதாம் அபுடியாப் ஆகிய இருவரும், “நாங்கள் பிபிசியை சேர்ந்த செய்தியாளர்கள்” என்று ஐடி கார்டை காட்டியுள்ளனர்.

israel war
“சர்வதேச அளவில் எங்களுக்கு ஒத்துழைப்பு இருக்கு; ஹமாஸை அழித்து வெற்றிபெறுவோம்” - இஸ்ரேல் பிரதமர்

இதுகுறித்து பேசிய டுடுஞ்சி, நடந்த நிகழ்வுகளை படம்பிடிக்க முயன்றபோது தான் கழுத்தில் தாக்கப்பட்டதாகவும், தனது ஃபோனை இஸ்ரேலிய போலீஸார் தூக்கி எறிந்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், தங்களது செய்தியாளர் குழு தாக்கப்பட்டது குறித்து பேசிய பிபிசி தரப்பு, “இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் செய்தியாளர்கள் முழு சுதந்திரத்தோடு செய்தி சேகரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com