\
ரூ.16 லட்சம் செலவில் மனித ’பார்பி’ ஆன பெண்!

ரூ.16 லட்சம் செலவில் மனித ’பார்பி’ ஆன பெண்!

ரூ.16 லட்சம் செலவில் மனித ’பார்பி’ ஆன பெண்!
Published on

பதினாறு லட்சம் ரூபாய் செலவு செய்து தன்னை பார்பி பொம்மை போல பெண் ஒருவர் மாற்றியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ராச்சல் இவான்ஸ். வயது 45. இவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. இதனால் மன வருத்தத்தில் இருந்தார் ராச்சல். இவருக்கு பார்பி பொம்மை என்றால் கொள்ளை பிரியம். தன்னையும் பார்பி பொம்மையாக்க நினைத்தார். இதற்கான ஆபரேஷன்களை விசாரித்தார். செலவெல்லாம் கன்னா பின்னாவென்று இருந்தது. தனது சேமிப்பில் இருந்து செலவு செய்து, பார்பி பொம்மை போல தனது முகம், இடுப்பு மற்றும் உடலமைப்பை மாற்றியுள்ளார். அந்த பொம்மை போல உடலை ஒல்லியாக மெயின்டெயின் பண்ண, தினமும் 12 கி.மீ ஓடுகிறார். வாரத்துக்கு ஐந்து முறை ஜிம்மே கதியென்று இருக்கிறார். 
இதற்கு மொத்தம் ரூ.16 லட்சம் செலவாகி இருக்கிறது. ஒரு பகுதி செலவை, ராச்சலின் முன்னாள் காதலர் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com