\
ம‌னைவிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த‌ ஒபாமா

ம‌னைவிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த‌ ஒபாமா

ம‌னைவிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த‌ ஒபாமா
Published on

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மனைவி மிச்செல் ஒபாமாவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் ஒபாமா அந்த பதவியில் இருந்து விடை பெற இருக்கிறார். இந்த நிலையில் சிகாகோவில், அதிபராக மக்களுக்கு கடைசி உரை நிகழ்த்தினார் ஒபாமா. அப்போது தனது குடும்பத்திற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மனைவி மிச்செல் குறித்து பேசிய அவர், மிச்செல் தனது மனைவி மட்டுமல்ல, தன்னுடைய சிறந்த தோழி என அவர் கூறினார்.

நாட்டின் முதல் குடிமகளாக மிச்செல், நாட்டையே பெருமைப்பட வைத்துள்‌ளதாக புகழ்ந்த ஒபாமா வரும் சந்ததியினர் மிச்செல்லை எடுத்துக்காட்டாக நினைக்கின்றனர் என கூறினார். தனது மகள்களை புகழ்ந்து பேசிய ஒபாமா, இருவரும் தன்னை பெருமைப்பட வைத்திருப்பதாக தெரிவித்தார். ஒபாமாவின் உணர்வுப்பூர்வமான பேச்சை அவரது மகள்கள் கண்ணீர் மல்க கண்டு ரசித்தனர். இதனை அடுத்து அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடனுக்கும், அதிபர் அலுவலக அதிகாரிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com