முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது மகளின் பிரிவுக்காக அழுத கதையொன்றை கூறியுள்ளார். அதில் ஒரு சராசரி தந்தையாக அவர் எப்படி அழுதார் என்பதை விளக்கியுள்ளார்.
ஒபாமாவின் மூத்த மகள் மலியா. அவரை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பல்கலைக் கழக வளாகத்தில் முதல் நாள் இறக்கிவிட்டபோது நடந்த உணர்ச்சிப் பூர்வமான நிகழ்வை அவர் விவரித்துள்ளார். அந்த உணர்வு இதயத்தை திறந்து அறுவை சிகிச்சை செய்வதை போல இருந்தது என்று கூறியுள்ளார்.
அவள் முன்பு நான் அழவில்லை என்பது எனக்குப் பெருமையாக இருந்தது. ஆனால், பல்கலைக் கழகத்திலிருந்து திரும்பி வரும்போது, ரகசியப் பாதுகாப்புப் பிரிவினர், நான் உணர்ச்சிவசப்பட்டு, கண்கலங்கியதை நாசூக்காக கண்டும் காணாததுமாக கடந்து சென்றுவிட்டனர் என்று ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்கர்களுக்கு இந்தியர்களை போல பந்த பாசம் இருப்பதில்லை என்ற தவறான பொது அபிப்ராயத்தை தனது உரையின் மூலம் ஒபாமா உடைத்திருக்கிறார்.