'பாகிஸ்தான் + சவுதி + துருக்கி..' முத்தரப்புப் பாதுகாப்புக் கூட்டணியில் இணையும் வங்கதேசம்?
பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி அமைத்துள்ள முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியில் இணைய வங்கதேசம் பரிசீலிப்பது தெற்காசிய பாதுகாப்பு சமநிலைக்கு புதிய பரிமாணம் சேர்க்கும் முடிவாக பார்க்கப்படுகிறது. தாக்குதல் நேரத்தில் பரஸ்பர உதவி ஒப்பந்தம் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக ஏற்கனவே மதிப்பிடப்படுகிறது; வங்கதேசம் இணைந்தால் இந்தியாவின் மூலோபாய சூழல் மேலும் சிக்கலாகும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் அமைத்துள்ள பாதுகாப்புக் கூட்டணியில் இணைய வங்கதேசமும் பரிசீலித்து வருகிறது. வங்கதேசத்தின் நலன்களை கருத்தில் கொள்வதுடன் சர்வதேச அளவில் மாறிவரும் சூழலை கருத்தில் கொண்டு இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹுமாயூன் கொபிர் தெரிவித்தார்.
பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபிய நாடுகள் தங்களில் ஏதேனும் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானால் மற்ற இரு நாடுகளும் உதவிக்கு வரும் என ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இது இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வங்கதேசமும் அதில் இணைந்தால் அது இந்தியாவுக்கு சிக்கலாக மாறும் என கருதப்படுகிறது.

