வங்கதேசப் போராட்டம்
வங்கதேசப் போராட்டம்முகநூல்

வங்கப் போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவ அமைப்பினர்; புதிய கட்சி தொடங்கியது ஏன்? யாருக்கு பாதகம்!

புதிய கட்சி தொடங்கிய மாணவர் அமைப்பினர்: யாருக்கு நெருக்கடி?
Published on

வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆடி கவிழ்வதற்குக் காரணமாக இருந்த போராட்டத்தை முன்னின்று நடத்தீய மாணவர் அமைப்பினர் புதிய அரசியல் கட்சி தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1971ல் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த இடஒதுக்கீடுக்கு எதிராக வங்கதேசத்தில் எதிர்ப்பு குரல் வெடித்தது. ஒரு கட்டத்தில் கலவராமாக மாறியது. இதனால், இடஒதுக்கீடு நிறுத்திவைக்கப்பட்டநிலையில், ‘ பாகுபாட்டுக்கு எதிரான மாணவர் இயக்கம்’ போராட்டத்தை முன்னின்று நடத்தினர்.

மீண்டும் கலவர பூமியாக மாறியது வங்கதேசம். இந்தநிலையில்தான், சர்சைக்குரிய இந்த இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.

மேலும், வங்கதேச பிரதமரான ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் முன்வைக்கப்பட்டன. பிரதமரின் இல்லமும் சூறையாடப்பட்டது.

வங்கதேசப் போராட்டம்
ஜெலன்ஸ்கியை முகத்திற்கு நேராகவே கடுமையாக சாடிய அமெரிக்க அதிபர்!

இதனைத்தொடர்ந்து ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனையடுத்து, வங்கதேசத்தி ஷேக் ஹசீனாவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்தநிலையில், நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

அடுத்த தேர்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசு நியமிக்கப்படுவதாகவும், அதன் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இருப்பார் எனவும் அறிவிப்புகள் வெளியாகின. புதிய அரசு எப்படி வங்கதேச மக்களை ஆள போகிறது? என கேள்விகள் எழுந்தன. ஆனால் யூனுஸ் இந்த விஷயத்தை புத்திசாலித்தனமாக அணுகினார்.

இதன்பிறகு, முன்னதாக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்தப்பட்டதற்கான கொள்கைப்பிரகடனத்தை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டனர்.

ஆனால், இதற்கு யூனுஸ் தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, இதனை இந்த திட்டத்தை மாணவர் அமைப்பினர் கைவிட்டனர். இந்தநிலையில்தான், இந்த மாணவ அமைப்பு மாணவர்கள் புதியதாக அரசியல் கட்சியை கடந்த வெள்ளிக்கிழமை ( 28 பிப்ரவரி) அன்று தொடங்கியுள்ளனர் .

இதற்கு 'தேசிய குடிமக்கள் கட்சி' என்றும் பெயரிட்டிருக்கின்றனர். இந்த கட்சியின் குறிகோள் பாகுபாடற்ற சமத்துவத்தை உருவாக்குவதுதான் என்று கூறியுள்ளனர்.

கட்சியின் நோக்கம்:

தற்போது நடைமுறையில் இருக்கும் வங்கதேச அரசியல் சாசனத்தை ஒழிப்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த அரசியல் கட்சி யாருக்கு நெருக்கடிய ஏற்படுத்துமோ இல்லையோ, ஆனால் நிச்சயம் யூனுஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், ஷேக் ஹசீனாவிற்கு அடைக்களம் கொடுத்ததால் அதிருப்தி அடைந்த யூனுஸ் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கையில் எடுத்ததால், அவருக்கு எதிராக மாணவர்கள் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com