கொரோனா தடுப்பூசி பரிசோதனை.. ஆர்வத்துடன் தயாராகும் பங்களாதேஷ்

கொரோனா தடுப்பூசி பரிசோதனை.. ஆர்வத்துடன் தயாராகும் பங்களாதேஷ்
கொரோனா தடுப்பூசி பரிசோதனை.. ஆர்வத்துடன் தயாராகும் பங்களாதேஷ்

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவருகின்றன. ரஷ்யாவில் மருந்து சோதனை வெற்றியடைந்துள்ளதாகத் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைகள் பலகட்டங்களாக நடந்துவருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் உருவாகிவரும் கொரோனா தடுப்பூசியை பலகட்ட சோதனைகளில் ஈடுபடுத்த பங்களாதேஷ் தயாராகிவருகிறது. சீனாவுடன் எல்லைப் பிரச்சினை எழுந்துள்ள தருணத்தில், கிழக்குப் பகுதியில் உள்ள அந்த நாட்டுடன் இந்தியா நட்புறவை மேம்படுத்த விரும்புகிறது.

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் தொடர்பாக, சில தினங்களுக்கு முன்பு இந்திய வெளியுறவுத் துறைச் செயலர், தலைநகர் டாக்கா சென்று பிரதமர் ஷேக் ஹசீனவைச் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளை மேற்கொள்ள பங்களாதேஷ் தயாராக இருக்கிறது. விரைவில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம் " என்று அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com