\
Bangladesh Protests Erupt Over Sheikh Hasina's Return Plans
Bangladesh Protests Erupt Over Sheikh Hasina's Return Plansreuters

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; முகமது யூனுஸ் வீட்டுக்கு தீ வைப்பு

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து இப்பகுதியில் பார்க்கலாம்...
Published on: 

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, நாடு திரும்பும் வேலையில் இறங்கியதே, அங்கு போராட்டங்களும் வன்முறைகளும் வெடிப்பதற்கு முக்கிய காரணம். கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனா, வரும் டிசம்பர் மாதம் வங்கதேசம் திரும்ப உள்ளதாக அறிவித்திருந்தார். இதற்காக தமக்கு புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கக்கோரி, இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகத்தை அணுகினார். ஆனால், ஷேக் ஹசீனாவுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வங்கதேச அரசு திட்டவட்டமாக மறுத்தது. அதோடு, அவரை நாடு கடத்தவேண்டும் என்றும் இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது. இதனால் கொந்தளித்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர், நாடு தழுவிய போராட்டத்தில் குதித்தனர். பதிலுக்கு ஆளுங் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட பல இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக, வங்கதேச இடைக்கால அரசின் முன்னாள் தலைவர் முகமது யூனுஸின் பூர்வீக வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதையடுத்து தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.