’இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம்’ - எதிர்க்கட்சி தீவிர பிரசாரம்.. பதிலடி கொடுத்த வங்கதேச பிரதமர்!

’இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம்’ என்ற பிரசாரத்தைத் தொடங்கியிருக்கும் வங்கதேச எதிர்க்கட்சிக்கு எதிராக அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா பதிலடி கொடுத்துள்ளார்.
ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனாபுதிய தலைமுறை

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதேநேரத்தில், நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சி அறிவித்திருந்த நிலையில், மொத்தமுள்ள 300 தொகுதிகளில் அவாமி லீக் கட்சி 200க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியது. இதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா 5வது முறையாக மீண்டும் பிரதமர் ஆனார். வங்கதேசத்தை நிறுவிய ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளான ஹசீனா, 2009ஆம் ஆண்டுமுதல் ஆட்சி செய்துவருகிறார். உலகின் மிக நீண்ட கால அரசியல் தலைவர்களில் ஹசீனாவும் ஒருவர்.

இந்தியாவுடன் தொடர்ந்து நட்புறவைப் பேணி வரும் ஷேக் ஹசீனா, கடந்த பிப்ரவரி மாதம் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை புரிந்தார். இந்தியா குறித்து அவர், “இந்தியா ஒரு நம்பகமான நட்பு நாடு, 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரின்போது எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வங்கதேச தேர்தலில் ஹேக் ஹசீனாவுக்கு இந்தியா உதவியதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதன் எதிரொலியாக ’இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம்’ என்ற பிரசாரத்தை வங்கதேச எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி தொடங்கியது. இந்த விவகாரத்தில் இதுநாள் வரை அமைதிகாத்துவந்த பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது காட்டமாக பதிலளித்துள்ளார்.

இதையும் படிக்க: ’என் புருஷனை கொன்றால் ஸ்பாட்டிலேயே ரூ.50 ஆயிரம்’ - ஸ்டேட்டஸ் வைத்த மனைவி.. பதறியோடிய கணவர்!

ஷேக் ஹசீனா
வங்கதேச பாராளுமன்ற தேர்தல்: தொடர்ந்து 4 வது முறையாக ஆட்சியை பிடித்த அவாமி லீக் கட்சி!

இதுகுறித்து அவர், “பங்களாதேஷ் தேசிய கட்சி தலைவர்கள் இந்திய பொருள்களை புறக்கணிக்க வலியுறுத்துகின்றனர். அவர்கள் தங்கள் மனைவியிடம் இருக்கும் இந்திய புடவைகளை புறக்கணிக்காதது ஏன்? அவர்கள் அக்கட்சி அலுவலகம் முன்பு தங்கள் மனைவியின் இந்திய புடவைகளை எரிப்பார்களா? அப்படிச் செய்தால், உண்மையாகவே அவர்கள் இந்திய பொருள்களை புறக்கணிப்பதாக ஏற்றுக்கொள்ளலாம்.

எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும்போது, அவர்களின் மனைவி இந்தியாவிற்கு சென்று புடவைகளை வாங்கிவருவதோடு மட்டுமின்றி, இங்கு விற்பனையும் செய்துள்ளனர். இந்திய ஆடைகளை மட்டுமல்ல, மசாலா பொருள்களையும் அவர்கள் புறக்கணிப்பார்களா? வெங்காயம், பூண்டு, இஞ்சி உள்ளிட்ட சமையல் பொருள்களை இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். இவற்றை பயன்படுத்தாமல் அவர்கள் சமையல் செய்து உண்பார்களா? இதற்கு எதிர்க்கட்சி முதலில் பதில் கூற வேண்டும்” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படிக்க: 5 கோரிக்கைகள்.. 2ஆம் எண் அறை.. திகார் ஜெயிலில் அரவிந்த் கெஜ்ரிவால்.. 1, 5, 7இல் ஆம்ஆத்மி கட்சியினர்!

ஷேக் ஹசீனா
'இந்தியா எப்போதும் எங்களது நம்பிக்கையான நண்பன்' - வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா புகழாரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com