பங்களாதேஷ் தேர்தலில் வன்முறை: 2 பேர் பலி, 10 பேர் படுகாயம்
பங்களாதேஷில் இன்று நடக்கும் தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்களில் 2 பேர் கொல்லப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந் துள்ளனர்.
பங்களாதேஷ் நாடாளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் அவாமி லீக் கட்சிக்கும் பங்களாதேஷ் தேசிய கட்சிகும் கடும் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.
இன்று காலை 8 மணியளவில் வாக்குப் பதிவுத் தொடங்கியது. வாக்களிப்பதற்காக பெண்கள் உள்பட பலர் வரிசையில் நின்றனர். தேர்த லை முன்னிட்டு வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினர் ஏராளமானோர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில், ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி ஆதரவாளர்களிடையே தென்பகுதி நகரான பாஷ்காலியில் திடீரென மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத் தில் ஒருவர் பலியானார். 10 பேர் காயம் அடைந்தனர். மற்றொரு சம்பவத்தில் கற்கலால் அடித்து ஒருவர் கொல்லப்பட்டார்.
இதையடுத்து அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலில் ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமர் ஆவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.