\
உட்கார்ந்தபடியே ஸ்கிப்பிங்!! இப்படியும் கின்னஸ் சாதனை படைப்போம்ல! அசத்திய வங்கதேச இளைஞர்!

உட்கார்ந்தபடியே ஸ்கிப்பிங்!! இப்படியும் கின்னஸ் சாதனை படைப்போம்ல! அசத்திய வங்கதேச இளைஞர்!

உட்கார்ந்தபடியே ஸ்கிப்பிங்!! இப்படியும் கின்னஸ் சாதனை படைப்போம்ல! அசத்திய வங்கதேச இளைஞர்!
Published on

அன்றாடம் செய்யும் குறிப்பிட்ட சில விஷயங்கள் கூட கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடிக்கும் அளவுக்கு பிரசித்தமாகிவிடுகிறது. குறிப்பாக உடற்பயிற்சி சார்ந்த செயல்பாடுகள் பலவும் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்து விடுகிறது.

புஷ் அப் செய்வது, பளு தூக்குவது போன்ற பல பயிற்சிகள் செய்து கின்னஸ் பட்டியலில் இடம் பிடித்து வந்த நிலையில் வங்க தேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் ஸ்கிப்பிங் செய்து சாதனை புரிந்திருக்கிறார்.

அதன்படி ரசெல் இஸ்லாம் என்பவர் தனது சிறு வயதில் இருந்தே ஸ்கிப்பிங் செய்வதில் பெரும் ஆர்வம் கொண்டதால் அதற்கான உரிய பயிற்சி பெற்று அதனை தொடர்ந்து செய்து வருகிறார். இதுபோக ஸ்கிப்பிங் செய்வதில் பல சாதனைகளையும் படைத்திருக்கிறார்.

இந்த நிலையில், bum skipping எனக் கூறக்கூடிய தரையில் அமர்ந்தபடி 30 விநாடிகளில் 117 முறை ஸ்கிப்பிங் செய்து அசத்தி கின்னஸ் சாதனை பட்டியலில் இணைந்திருக்கிறார். ரசெல் பம் ஸ்கிப்பிங் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com