துர்கா பூஜை
துர்கா பூஜைஎக்ஸ்

மேற்கு வங்கம்|1200 டன் ஹில்சா மீன்கள்... நவராத்திரிக்காக வங்கதேசத்தின் பரிசு!

மேற்கு வங்க மாநிலத்தில் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் துர்கா பூஜை பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தின் கலாச்சார உணவான ஹில்சா மீன்களை 1200 டன் அளவில் வங்கதேச நாடு மேற்கு வங்கத்திற்கு பரிசாக அளித்துள்ளது.
Published on
Summary

நவராத்திரிக்காக, மேற்கு வங்கத்துக்கு ஆயிரத்து 200 டன் ஹில்சா மீன்களை பரிசாக அனுப்புகிறது வங்கதேசம். வங்காளிகளின் பாரம்பரியமும் வாழ்க்கை முறையும் கலந்த, இதன் உணர்வுப்பூர்மான பின்னணியைப் பார்க்கலாம்...

தமிழ்நாட்டில் பொங்கல், மஹராஷ்டிராவில் பிள்ளையார் சதுர்த்தி போல, மேற்கு வங்கத்தின் பெரும் பண்டிகை என்றால், அது துர்கா பூஜைதான். நமக்கு அது நவராத்திரி என்றே தெரியும். துர்கா பூஜை பண்டிகை சமயத்தில் தொடர்ந்து 10 நாள்கள், ஆட்டம் பாட்டம் என மாநிலமே கோலாகலமாக இருக்கும். துர்கை வழிபாடு, வீதி உலா என்ற பாரம்பரியத்துடன் ஹில்சா மீனையும் சேர்த்தாக வேண்டும். இந்த ஹில்சா மீன்களைப் பற்றிப் பேசுவது அலாதியானது.

ஹில்சா மீன்கள்
ஹில்சா மீன்கள்x

வங்கதேசத்தில் உள்ள பத்மா உள்ளிட்ட ஆறுகளிலும், வங்கதேசத்தை ஒட்டிய வங்காள விரிகுடா கடலிலும், ஹில்சா வகை மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. கங்கை நதியிலும் ஹில்சா மீன்கள் கிடைக்கின்றன. வங்கதேசத்திலும், இந்தியாவின் மேற்கு வங்கத்திலும் வசிக்கும் வங்காளிகளின் பாரம்பரிய உணவு என்றால் ஹில்சா மீன்கள்தான். அசாம், திரிபுரா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மக்களுக்கு, ஹில்சா மீன் விருப்ப உணவு. மென்மையான இறைச்சிக்கு பிரபலமான இவற்றை, ஆங்கிலத்தில் The ilish (ஐலிஷ்) மீன்கள் என்று சொல்வதுண்டு. மீன்களின் ராணி என்றும் இதைச் சொல்வார்கள்.

துர்கா பூஜை
மல்லிகைப் பூவை எடுத்துச் சென்ற நடிகை நவ்யா நாயர்.. ரூ.1.14 லட்சம் அபராதம் விதித்த ஆஸி.!

வங்காளிகளின் திருமண விழாக்களில் பரிமாறப்படும் விருந்து, ஹில்சா மீன் வகையின்றி நிறைவு பெறாது. வங்காளிகளின் புத்தாண்டு கொண்டாட்டத்திலும் ஹில்சா மீன் உணவு இடம்பெறத் தவறாது. வங்கதேசத்திலும் மேற்கு வங்க மாநிலத்திலும் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, இந்த வகை
மீன்களை சமைத்து உண்பது மரபு.

1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்கப் பிரிவினைக்கு முன்பு, மேற்கு வங்கமும் வங்கதேசமும் ஒன்றாகத் தான் இருந்தது. தற்போது வேறு வேறாக இருந்தாலும், வங்காளிகளின் மொழியும் கலாச்சாரமும் ஒன்றுதான். அந்த வகையில், வங்கதேசத்திலும் துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் ஹில்சா மீன் உணவு முக்கிய அங்கம் வகிக்கிறது.

தங்கள் நாட்டில் தாராளமாகக் கிடைக்கும் ஹில்சா மீன்களை, தனது தொப்புள் கொடி உறவான மேற்கு வங்கத்துக்கு பரிசாக வழங்குகிறது வங்கதேச அரசு. மேற்கு வங்க முதல்வருக்கு, துர்கா பூஜை பரிசாக பிரத்யேகமாக ஹில்சா மீன்கள் வந்து சேரும். இது உணர்வுப்பூர்மான ஒரு அணுகுமுறையாக இன்றளவும் பின்பற்றப்படுகிறது. அன்பின் பிணைப்பு, பாரம்பரியம் மற்றும் மதச்சடங்கின் உயிர்மூச்சு என்றும் இதைச் சொல்லலாம்.

துர்கா பூஜை
"நான் இறந்துவிட்டதாக செய்திகள்..." காஜல் அகர்வாலின் உருக்கமான பதிவு | Kajal Aggarwal

இந்த ஆண்டு, நட்புறவின் அடையாளமாக ஆயிரத்து 200 டன் ஹில்சா மீன்களை மேற்கு வங்கத்துக்கு அனுப்புகிறது வங்கதேச அரசு. ஒரு கிலோ ஹில்சா மீனின் விலை ஆயிரத்து 100 ரூபாய் வரை இருக்கும். கடந்த ஆண்டு, வங்கதேசத்தில் நிலவிய அரசியல் குழப்பத்தால், இந்தியாவுக்கு ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com