வங்கதேசம்: ஜனவரி 7 பொதுத் தேர்தல்... புறக்கணிக்கும் கட்சிகள்!

வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாதுகாப்பு கருதி நாடெங்கும் ராணுவத்தினர் குவிக்கப்பட உள்ளனர்.
வங்கதேசம்
வங்கதேசம்புதிய தலைமுறை

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி முறைகேடுகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்க நாடெங்கும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களைத் தேர்தல் ஆணையம் அனுப்ப உள்ளது.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவுட்விட்டர்

இத்தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி 14 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. ஆனால், தேர்தலில் ஏராளமான முறைகேடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறி, அதில் போட்டியிடப்போவதில்லை என முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி கூறியுள்ளது.

ஷேக் ஹசீனா நடத்தும் இத்தேர்தலை நேர்மையான முறையில் நடக்க வாய்ப்பே இல்லை என அக்கட்சி கூறியுள்ளது. வங்கதேச தேசியவாத கட்சி தவிர மேலும் 16 எதிர்க்கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. 2014ஆம் ஆண்டில் நடந்த தேர்தலையும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன.

2018இல் நடந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் செய்து அவாமி லீக் வெற்றிபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com