வங்கதேசத்தின் தந்தையைக் கொன்றவருக்கு தூக்கு

வங்கதேசத்தின் தந்தையைக் கொன்றவருக்கு தூக்கு
வங்கதேசத்தின் தந்தையைக் கொன்றவருக்கு தூக்கு
1975ஆம் ஆண்டில் வங்கதேச தலைவரைக் கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் ராணுவ வீரரான அப்துல் மஜீத் தூக்கிலிடப்பட்டார். 
வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படுபவர், ஷேக் முஜிபுர் ரஹ்மான். வங்கதேசம் தனி நாடாக உருவாகக் காரணமாக இருந்தவர் இவர்தான்.   அந்நாட்டின் முதல் அதிபரான க்ஷேக் முஜிபுர் ரஹ்மா, தற்போது வங்கதேசத்தின் பிரதமராக உள்ள ஷேக் ஹசினாவின் தந்தையாவார். முஜிபுர் ரஹ்மான் 1975 ஆம் ஆண்டு ராணுவ சதியால் கொல்லப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களும் அப்போது கொலை செய்யப்பட்டனர்.  வங்கதேசம், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்ற நான்கு ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்தது.
இந்தக் கொலை செய்த குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த குற்றவாளியான அப்துல் மஜேத்,  கடந்த 25 ஆண்டுகளாக காவல்துறையிடம் சிக்காமலிருந்து வந்த அவர், சமீபத்தில்தான் கைது செய்யப்பட்டார்.  ஆட்சிக் கவிழ்ப்பு  மற்றும் 1975 முஜிபுர் ரஹ்மான் கொலைச் சதியில் ஈடுபட்டதற்காக முன்னாள் இராணுவத் தலைவரான அப்துல் மஜீத்தை பங்களாதேஷ் அரசு இன்று தூக்கிலிட்டுள்ளது. அதாவது உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.01 மணிக்கு தூக்கிலிடப்பட்டார் என்று சட்ட அமைச்சர் அனிசுல் ஹுக் பி.டி.ஐ.க்கு தெரிவித்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  
மேலும் இந்தத் தண்டனை தலைநகரின் புறநகரில் உள்ள கெரானிகஞ்சில் உள்ள டாக்கா மத்தியச் சிறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சரியாக அதிகாலை 12.15 மணிக்கு மஜீத் இறந்துவிட்டதாக மருத்துவர் ஒருவர்  அறிவித்ததாக அந்தச் சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  அந்த நாட்டின் தலைவர் படுகொலை செய்யப்பட்டு ஏறக்குறைய படுகொலை செய்யப்பட்ட  , 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.  
இந்த வாரத் தொடக்கத்தில் அப்துல் மஜீத்தின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததையடுத்து, இந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com