bangladesh pakistan
bangladesh pakistanweb

10 லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமை.. PAK செய்த கோர செயல்.. மன்னிப்பு கேட்க வங்கதேசம் வலியுறுத்தல்!

1971இல் தங்கள் நாட்டில் புரிந்த கொடூரமான போர்க்குற்றங்களுக்காக பாகிஸ்தான் மன்னிப்புக்கோர வேண்டும் என வங்கதேசம் வலியுறுத்தியுள்ளது.
Published on

1971இல் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தபோது வங்கதேசம் என்ற பெயரில் தனி நாடாக்க அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது 30 லட்சம் மக்களை பாகிஸ்தான் ராணுவம் கொன்ற நிலையில், 10 லட்சத்திற்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இந்த கொடூர செயலுக்காக தங்கள் நாட்டு மக்களிடம் பாகிஸ்தான் மன்னிப்பு கோர வேண்டும் என்று வங்கதேசம் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க வெண்டும்!

1971இல் ஏற்பட்ட பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தானும் வங்கதேசமும் எதிரும் புதிருமாக இருந்து வந்தன. தற்போது அரசியல் சூழல் மாறிவரும் நிலையில், இரு தரப்பும் நெருங்கி வந்துள்ளன.

பாகிஸ்தான் அதிகாரிகள் குழு தாகாவில் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், வங்கதேச தரப்பில் சில கோரிக்கைகள்
வைக்கப்பட்டுள்ளன.

அதில், 30 லட்சம் மக்களை பாகிஸ்தான் ராணுவம் கொன்ற நிலையில், 10 லட்சத்திற்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதற்காக தங்கள் நாட்டு மக்களிடம் பாகிஸ்தான் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தானிலிருந்து தனியாக பிரிந்தபோது சொத்தில் பங்காக தங்களுக்கு தராமல் பாக்கி வைத்திருந்த 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை விரைந்து வழங்கவும் வங்கதேசம் கோரியுள்ளது.

இது தவிர, தங்கள் நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் பாகிஸ்தானியர்களையும் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வங்கதேசம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com