\
Bangkok Declares Flood Disaster Amid Heavy Rainfall
Thailand RainReuters

மூழ்கிய முக்கியப் பெருநகரம்.. இடுப்புவரை சூழ்ந்த வெள்ளம்.. பேரிடராக அறிவித்த அரசு!

வெளுத்து வாங்கிய கனமழையால் முக்கியமான பெருநகரமே மூழ்கியிருக்கிறது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

கடந்த சில மாதங்களாகவே, உலகின் பல்வேறு நாடுகளில் பெருமழை, வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாதிப்புகள் ஏன் ஏற்படுகிறது? இதனைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்? இயற்கையின் இந்தக் கோபத்தை எப்படி தணிப்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை, ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், உலகின் மிக முக்கிய சுற்றுலா நகரம் ஒன்றில், மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்களைக் கடும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது, தாய்லாந்து நாட்டின் தலைநகரம்தான் பாங்காங். இந்த பெருநகரம், நிர்வாக வசதிக்காக 50 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

Thailand Rain
Thailand RainReuters

செப்.24க்குப் பிறகு, அந்தப் பெருநகரத்தில் மிகப்பெரிய கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 300 மில்லி மீட்டர் அளவிலான மழை பதிவாகி இருப்பதாகவும், பாங்காங்கின் அடையாளமான விரிவான கால்வாய்கள் அனைத்தும் மழைநீரில் நிரம்பி வழிவதாகவும் கூறப்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில், இருசக்கர வாகனங்களும், கார்களும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, முழங்கால் முதல் இடுப்பளவு வரையிலான வெள்ளத்தில் நடந்துசெல்ல வேண்டிய அவல நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Bangkok Declares Flood Disaster Amid Heavy Rainfall
தாய்லாந்து | 133 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்து.. ஓடுதளம் மூடல்!

வீடுகள், கடைகள், உணவகங்கள் என்று பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால், பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்கள், கடந்த 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தைக் காட்டிலும், இது மோசமானதாக உள்ளது என்றும் கூறியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகாமல் தடுக்க 10 லட்சம் மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

Thailand Rain
Thailand RainReuters

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பள்ளிகள் மற்றும் அரசு கட்டடங்களில் தற்காலிக முகாம்கள் திறக்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழை நின்றுவிட்டாலே, தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்ற 4 நாட்கள் ஆகும் என்று கூறப்படும் நிலையில், மீண்டும் தொடர்ந்து மழை பெய்தால் என்ன ஆகுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. விநாடிக்கு 1,200 கன மீட்டர் வீதம் தண்ணீர் வெளியேற்றும் பம்புகள் மூலம், வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Bangkok Declares Flood Disaster Amid Heavy Rainfall
7 பேர் பலி.. 10 பேர் படுகாயம்.. மாணவர் நடத்திய கொடூரத் தாக்குதல்.. தாய்லாந்து பள்ளியில் சோகம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com