உலகம்
சுவிட்சர்லாந்தில் புகையிலை பொருட்கள் விளம்பரத்திற்கு தடை?
சுவிட்சர்லாந்தில் புகையிலை பொருட்கள் விளம்பரத்திற்கு தடை?
சுவிட்சர்லாந்தில் புகையிலை விளம்பரங்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக நாளை அங்கு பொது மக்களிடம் கருத்து கணிப்பு நடைபெற உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையில் 25 சதவிகிதம் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாகவும் இதனால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் மரணமடைவதாகவும் ஆய்வுத் தகவல்கள் உள்ளன.
இதையடுத்து புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை வெகுவாக குறைக்க முடிவெடுத்துள்ள சுவிட்சர்லாந்து அரசு, அதன் முதல் படியாக சிகரெட் விளம்பரங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. சிகரெட் விளம்பரங்களால் இளம் தலைமுறையினர் அதிகம் கவரப்படுவதாக புகார் உள்ள நிலையில் இம்முடிவை சுவிஸ் அரசு எடுத்துள்ளது

