
பந்து விளையாடும் பறவை வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
பந்து என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அப்படி பிடித்ததால்தான், கிரிக்கெட், கால் பந்து, கைப்பந்து, கோல்ஃப் என உலகின் பல விளையாட்டுக்கள் பந்தைச் சுற்றியே உள்ளது.
காரணம், அதன் ஈர்ப்பு சக்திதான். மேலே தூக்கிப்போடும் பந்து சுழன்று வரும்போது அதை கீழே விழாமல் பிடிக்கும் ஆனந்தமே தனிதான். அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளையும் சிரிக்க வைத்துவிடும். சிடுசிடுவென இருக்கும் முதியோர்களையும் குழந்தைகளாக்கிவிடும். அப்படிப்பட்ட பந்தை பறவை தள்ளி தள்ளிவிட்டு விளையாடும் வீடியோவை பார்ப்பதற்கே கோடி கண்கள் பத்தாது.
The feel good page என்ற ட்விட்டர் பக்கத்தில் குங்குமப்பூ நிற பெரிய பந்த பின்னாலிருந்து பறவை ஒன்று தள்ளிக்கொண்டே வருகிறது. பார்ப்பதற்கு ஏதோ பந்தே நகர்ந்து வருகிறதே என்று வியந்து பார்த்தால் பந்தை தள்ளிகொண்டு வருவது குட்டி பறவை. அது பந்தை தள்ளிக்கொண்டும் மேலே ஏறி நின்றும் விளையாடுவதை பார்க்கும்போது எப்படிப்பட்ட மனக்கவலைகளையும் போக்கிவிடும் மருந்துபோல் இருக்கிறது. இதனை பலரும் பகிருந்து வருகிறார்கள்.